ஆக்ராவில் உள்ள ஜெகதீஷ்புரா பகுதியில் சுரேகா குமாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் பெற்றோர் எதிர்ப்பை மீறி தனது காதலனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சுரேகா குமாரி தனது பெற்றோருடன் பேசுவதில்லை. ஆனாலும் சொத்துக்களை தனக்கு எழுதி வைக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். அதற்கு அவரது பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் கோபமடைந்த சுரேகா பல மாதங்களாக பெற்றோரின் வீட்டின் மீது கற்கள், செங்கற்கள், கண்ணாடி ஆகியவற்றை வீசி வந்தார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த சுரேகாவின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனாலும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் சுரேகா தனது பெற்றோர் வீட்டின் மீது கற்களை தூக்கி வீசியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.