பிரபல இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் அடுத்ததாக தளபதி 69 என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் வெங்கட் பிரபு நடிப்பில் விஜய் நடித்த தி கோட் திரைப்படம் வெளியாகி 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்திருந்தது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக தளபதி 69 படத்தில் விஜய் நடிக்கும் நிலையில் விவசாய பின்னனி கலந்த அரசியல் கதையாக இப்படம் அமையலாம் என்று கூறப்படுகிறது. இது நடிகர் விஜயின் கடைசி படம் என்பதால் எதிர்பார்ப்புகளும் அதிக அளவுக்கு இருக்கிறது. அதாவது நடிகர் விஜய் அரசியலுக்கு வர இருப்பதால் தளபதி 69 கடைசி படம் என்றும் அதற்கு பின் நடிக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் அறிமுக கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு நேற்று முதல் வெளியாகி வருகிறது. அதன்படி அனிமல் படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் பாபி தியோல் தளபதி 69 படத்தில் இணைந்துள்ள நிலையில் நடிகை பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடிப்பதாக படக்குழு  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன் பிறகு படத்தின் அறிமுக கதாபாத்திரங்கள் குறித்து படகுழு வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் நிழல் கதாபாத்திரங்கள் இடம் பெற்றிருந்தது. அதை வைத்து ரசிகர்கள் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளை கணித்துள்ளனர். அதன்படி பிரேமலு படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த மமிதா பைஜூ, ப்ரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிப்பதாக கணித்துள்ளனர். மேலும் இது குறித்தான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.