நடப்பு ஆண்டு பொங்கலுக்கு இசையமைப்பாளர் தமன் 2 பெரிய திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். அதாவது, தமிழில் விஜய் நடிக்கும் “வாரிசு”, தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் “வீரசிம்ஹா ரெட்டி” ஆகிய 2 படங்களுக்கு அவர் இசை அமைத்துள்ளார். இதில் வீர சிம்ஹா ரெட்டி படத்துக்கான வேலைகளை அவர் முன்னரே முடித்துக் கொடுத்து விட்டதாக தகவல் வெளியாகியது.

எனினும் வாரிசு படத்தின் இசை வேலைகளை தமன் இன்று நள்ளிரவுதான் முடித்துக் கொடுத்திருக்கிறார். டைரக்டர் வம்சி பைடிப்புள்ளி மற்றும் குழுவினருடன் அவர் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “தியேட்டர்களில் முதல்நாள் முதல் காட்சியில் உங்களை சந்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.