தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கும் நடிகர் அஜித், நடிகர் விஜய் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர்களின் சம்பள விபரத்தை பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த 40 வருடங்களாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக பல வரும் ரஜினிகாந்த் 100 கோடிக்கு மேல் சம்பளம் பெற்று வந்த நிலையில் தற்போது ஜெயிலர் படத்திற்காக 80 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார்.
அதன்பிறகு வசூல் சக்கரவர்த்தியான நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது நடிக்கும் லியோ படத்திற்காக 120 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார். அதன் பிறகு அல்டிமேட் ஸ்டார் அஜித் ஏகே 62 திரைப்படத்திற்காக 105 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாகவும் பிஸ்மி தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் ரஜினி மற்றும் அஜித் ஆகியோரை விட வசூல் சக்கரவர்த்தியான நடிகர் விஜய் தான் அதிக சம்பளம் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.