தமிழகத்தில் மது கடைகள் மூலமாக அரசுக்கு கூடுதல் வருவாய் வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 முதல் 20 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக புகார்கள் என்பது தொடர்ந்து எழுந்து கொண்டே இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதாவது டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் முறையை தடுப்பதற்காக பில்லிங் முறை மற்றும் qr code மூலம் பணம் செலுத்தும் முறை போன்றவைகளை அறிமுகப்படுத்த இருக்கிறார்கள்.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் அச்சிடப்பட்ட பில் வழங்கும் நடைமுறை இன்னும் 2 வாரங்களில் அமல்படுத்தப்பட இருப்பதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே இந்த முறை ராமநாதபுரம் மற்றும் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் சோதனையில் இருக்கிறது. இதைத்தொடர்ந்து சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் இன்னும் இரண்டு வாரங்களில் அமல்படுத்தப்பட உள்ளது. மேலும் இந்த முறையினால் இதை கூடுதலாக கட்டணம் வசூலிக்க முடியாது என்பதால் மது பிரியர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.