தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு 2024-25 ஆம் ஆண்டுக்கான ஆன்லைன் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த விளையாட்டில் கபடி மற்றும் சிலம்பம் உள்ளிட்ட 53 வகையான போட்டிகள் நடத்தப்படும். நடைபாண்டுக்கான போட்டிகள் விரைவில் நடைபெற உள்ள நிலையில் போட்டியில் பங்கேற்பதற்கான இணையதளம் முன்பதிவு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். இது குறித்த மேலும் விவரங்களை https://sdat.in/cmtrophy/ என்ற இணையதள பக்கத்தில் அறியலாம்.