நாகப்பட்டினம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு வரும் இருபதாம் தேதி விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாகூர் நாகநாதர் சுவாமி கோயில் தேரோட்டமானது வருடம் தோறும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் வரும் இருபதாம் தேதி இந்த தேரோட்டம் நடைபெறுகிறது.

இந்த தேரோட்டத்தை ஒட்டி வரும் இருபதாம் தேதி ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறை ஈடு செய்ய அடுத்த மாதம் ஆறாம் தேதி பள்ளிகள் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.