
தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் படி தற்போது 1.14 கோடி மகளிர்கள் பயன்பெறுகிறார்கள். இந்த திட்டம் விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் புதிய பயனாளிகள் இணைக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 15ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஏராளமான பெண்கள் விண்ணப்பித்து காத்திருக்கிறார்கள்.
சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் எனவும் புதிய பயனாளிகள் குறித்து இன்னும் 3 மாதத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்றும் அறிவித்தார். இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக தற்போது முதல்வர் ஸ்டாலின் விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. மேலும் அது புதிய பயனாளிகள் குறித்து விவரமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.