பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் பணியில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மாணவர்கள் தேர்வை தன்னம்பிக்கையோடு எழுத வேண்டும். பதற்றத்தோடு, அச்சத்தோடு எழுத வேண்டாம். அந்த அச்சத்தை போக்குவதற்காக தான் மூன்று திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது.
எனவே அச்சம் இல்லாமல் தேர்வை மாணவர்கள் எழுத வேண்டும். அனைத்து மாணவர்களுமே நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்க முடியாது. யார் யாரெல்லாம் என்னன்னு மதிப்பெண்கள் பெறுகிறார்கள் அதற்கு தகுந்தார் போல மாணவர்கள் தங்களுடைய திட்டங்களை தீட்ட வேண்டும் என்று முதல்வர் கூறியிருந்தார். அந்த பள்ளிகளில் தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று கூறியுள்ளார்.