தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 29 முதல் 31 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. பாஜக கூட்டணி 4 முதல் 6 தொகுதிகளில் வெல்லும் என்றும் அதிமுக கூட்டணி 4 முதல் 6 தொகுதிகளில் வெல்லும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் திமுக 2 தொகுதிகளில் வெல்லும் என்றும் பாஜக ஒரு தொகுதியில் வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.