தமிழகத்தில் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அதன்படி ரேஷன் கடைகளில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு போன்றவைகள் வழங்கப்படுகிறது. இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யப்படும் நிலையில் ஜனவரி 13ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது.

ஆனால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மட்டும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படவில்லை. ஏனெனில் இங்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற இருப்பதால் தேர்தல் ஆணையம் பரிசுப் பொருட்கள் வழங்க தடை விதித்துள்ளது. இதன் காரணமாக அந்த தொகுதியில் மட்டும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படவில்லை. மேலும் தேர்தல் ஆணையத்திடம் உரிய அனுமதி பெற்ற பெண் பொங்கல் தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு உறுதி கொடுத்துள்ளது.