தமிழகம் முழுவதும் அரசு சார்பில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் தொடங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இன்றைய காலகட்டத்தில் பலரும் குழந்தையின்மை பிரச்சினையால் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இதற்காக தனியார் மருத்துவமனைகளில் பணத்தை அதிகமாக செலவழிக்கிறார்கள்.

எனவே குழந்தையின்மை பிரச்னையை போக்க, ஆயிரக்கணக்கான தம்பதிகள் தனியார் மருத்துவமனைகளில் உள்ள செயற்கை கருத்தரிப்பு மையங்களை நாடி வருகின்றனர். இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு மருத்துவமனைகளிலும் அந்த வசதி செய்துதரப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.