மத்திய பாஜக அரசையும், இந்துத்துவா அமைப்புகளையும் கடுமையாக எதிர்த்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவர் பிரகாஷ்ராஜ். இவர் கர்நாடகாவில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அடிக்கடி மத்திய அரசின் கொள்கைகள், திட்டங்களை சாடி வரும் இவர், சமீபத்தில் இஸ்ரோவின் சந்திரயான் 3 திட்டம் பற்றி பதிவிட்ட கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், டெல்லியில் தற்போது படப்பிடிப்பு ஒன்றில் பிரகாஷ்ராஜ் கலந்துகொண்டுள்ளார். இது பற்றி ட்வீட் செய்துள்ள அவர், ‘டெல்லியில் நான்.. கவலை வேண்டாம் பக்தர்களே, நான் எனது டீ கப்புடன் படப்பிடிப்பில் இருக்கிறேன்’ என குறிப்பிட்டு கேலி செய்துள்ளார்.