ரயில்வே துறையில் பல்வேறு பிரிவுகளில் 7951 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தேர்ந்தெடுக்கும் பதவிகளுக்கு ஏற்ப கல்வித் தகுதி இருக்க வேண்டும். இதற்கு 18 முதல் 36 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ (பொறியியல்), இளங்கலைப் பட்டம் (பொறியியல்/தொழில்நுட்பம்), பிஎஸ்சி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

விருப்பமுள்ளவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று ஆகஸ்ட் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கணினி அடிப்படையிலான தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.