
உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி மதுரையில் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. போட்டி நேற்று முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது.
இதன் காரணமாக அந்த பகுதியில் செயல்படும் இரண்டு மதுபான கடைகளும் நாளை மூடப்படும் என்று தற்போது மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் அன்றைய தினத்தில் மதுபான கடைகள் திறக்க கூடாது எனவும் மீறி திறப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.