தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது த‌செ. ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.‌ இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கும் நிலையில் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அதன் பிறகு படத்தில் மஞ்சு வாரியர், துசாரா விஜயன், ராணா டகுபதி, பகத் பாஸில் மற்றும் அமிதாபச்சன் உள்ளிட்ட பலர் முக்கிய இடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்று படத்தின் டிரைலர் வெளியாகும் என்ற படத்தில் அறிவித்திருந்தது.

அதன்படி தற்போது ட்ரெய்லர் வீடியோவை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் டிரைலர் வீடியோ ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது.