தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் அந்த திரைப்படத்தில் நதிஷா பதானி ஹீரோயின் ஆக நடிக்கிறார். இந்த படத்தை ஸ்டூடியோகிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் நிலையில் 38 மொழிகளில் 3d தொழில்நுட்பத்தில் வருகிற 14 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் ட்ரெய்லர் வீடியோ இன்று வெளியாகும் என்று பட குழு அறிவித்தனர். அதன்படி தற்போது ட்ரெய்லர் வீடியோவை பட குழு வெளியிட்டுள்ளனர். மேலும் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் கங்குவா டிரைய்லர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது.