தமிழகம்  முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கு மறுநாள் மாட்டுப் பொங்கல். அன்றைய தினம் திருவள்ளுவர் தினம். இதன் காரணமாக பொங்கல் பண்டிகை, திருவள்ளுவர் தினம் மற்றும் காணும் பொங்கல் அதற்கு அடுத்த நாள் என மொத்தம் 6 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னையில் இறைச்சி கடைகள் மூடப்படும் என்று தற்போது சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

அதன்படி சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் புளியந்தோப்பு, கள்ளிகுப்பம், சைதாப்பேட்டை, வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள இறைச்சி கூடங்கள் மூடப்பட இருக்கிறது. மேலும் இந்த உத்தரவை செயல்படுத்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.