தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் சுகாதார அலுவலர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இதற்கான கணினி வழித்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டானது இன்று வெளியிடப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

இதற்கான தேர்வு வரும் 13ம் தேதி காலை மற்றும் மாலையில் நடக்கவுள்ள நிலையில் தேர்வாணைய இணையதளத்தில் தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.