நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவருக்கு எதிராக தற்போது எடிட் செய்யப்பட்ட ஒரு போலியான புகைப்படம் வலைதளத்தில் பரவி வருகிறது. பொதுவாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும் விஷயங்களால் அவரை எதிர்க்கட்சியினர் ‌ விளாசுவார்கள். இவருடைய கட்சியிலிருந்து சமீப காலமாக நிர்வாகிகள் பலர் விலகி வரும் நிலையில் அவர்கள் சீமான் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார்கள். அதாவது கட்சியில் இருப்பவர்களை சீமான் மதிப்பது கிடையாது என்றும், உழைப்பவர்களுக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு கிடைப்பதில்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது சீமானை கலாய்க்கும் விதமாக ஒரு போஸ்ட் வைரல் ஆகிறது. அதில் ஒரு கடையில் சீமான் CM சாகும் வரை கடன் கிடையாது என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. ஆனால் அது உண்மை கிடையாது. உண்மை என்னவெனில் கச்சத்தீவை மீட்கும் வரை கடன் கிடையாது என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் இந்த போஸ்டரை தான் எடிட் செய்து சீமான் முதலமைச்சர் ஆகும் வரை கடன் கிடையாது என்று இணையதளத்தில் வைரல் ஆக்குகிறார்கள். மேலும் இது நாம் தமிழர் கட்சியினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.