சூப்பர் ஹீரோ தொடரான சக்திமான், தூர்தர்ஷனில் 90-களில் பல்வேறு எபிசோடுகளாக ஒளிபரப்பப்பட்டு வரவேற்பை பெற்றது. இத்தொடர் குழந்தைகளை மிகவும் ஈர்த்தது. இதில் பண்டிட் கங்காதர் வித்யாதர் மாயாதர் ஓம்கார்நாத் சாஸ்திரி என்ற சக்திமான் கதாபாத்திரத்தில் முகேஷ் கன்னா நடித்திருந்தார். இதனிடையே சக்திமான் தொடரை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் சினிமா படமாக எடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.

இதுபற்றி முகேஷ் கன்னா கூறியதாவது “சக்திமான் தொடர் ரூ.200 கோடி முதல் ரூ.300 கோடி வரையிலான பட்ஜெட்டில் சர்வதேச தரத்தில் சினிமா படமாக உருவாகும்” என்றார். இந்த நிலையில் படக்குழுவினர் இப்போது ரன்வீர் சிங்கை அணுகி சக்திமான் கதாபாத்திரத்தில் நடிக்க பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.