இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகஉள்ள படம் ரத்னம். இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையில் இந்த படம் வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் விஷால் கொடுத்த பேட்டியில் தியேட்டர் விநியோகஸ்தரை விமர்சித்து பேசினார். அதில், ஒரு படத்தை தள்ளி ரிலீஸ் செய்ய சொல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது. சினிமாவை நீங்கதான் குத்தகைக்கு எடுத்தீங்களா? என்னுடைய படத்தை வேறு தேதியில் ரிலீஸ் செய்ய சொல்ல நீ யார் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.