சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு சுய உதவிக் குழு மற்றும் ஹோமியோபதி மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பத்தை இணையதள மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் இன்று முதல் ஆகஸ்ட் 27ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் தேர்வுக் குழு அலுவலகத்தில் நேரில் வழங்கப்படாது என்றும் தரவரிசை கலந்தாய்வு அட்டவணை உள்ளிட்டவற்றை tn.health என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.