தமிழ் சினிமாவின் பிரபல நடிகை சமந்தா நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் அதிக எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள படம் “சாகுந்தலம்”. குணசேகர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கியமான வேடமேற்றுள்ளார். மேலும் அதிதிபாலன், கவுதமி, மதுபாலா, மோகன் பாபு, பிரகாஷ் ராஜ், அனன்யா நாகல்லா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 70 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படமானது வசூல் ரீதியாக பெரிய வெற்றியை கொடுக்கவில்லை.

இந்நிலையில் சாகுந்தலம் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் படுதோல்வி படமாக அமைந்தது பற்றி மிகுந்த மனவருத்தத்தில் உள்ளார் தயாரிப்பாளர் தில்ராஜு. படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்பே பிரபலமான ஓடிடி தளம் ஒன்றுக்கு 35 கோடிக்கு விற்கப்பட்டதால் இழப்பு 22 கோடியோடு போனது. இல்லையெனில் பெரும் நஷ்டத்தை சந்தித்து இருப்பேன் என புலம்பியுள்ளார். தன் 25 வருட சினிமா வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு தோல்வியை சந்தித்தது இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.