நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து பேசியது மிகவும் சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது பாலியல் இச்சை வரும்போது தாய், மகள் மற்றும் சகோதரிகளுடன் உடலுறவு கொள்ளுமாறு தந்தை பெரியார் கூறியதாக அவர் சொன்னார். இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது திருமாவளவனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, பெரியார் மீதான நன்மதிப்பை பொறுக்கிட வேண்டும் என்பதற்காக கிரிமினல் உத்தியில் சங்பரிவார்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபடுகிறார்கள். சாதி, மதம் மற்றும் மொழி இன அடையாளங்களின் பெயர்களில் இயங்கும் அமைப்புகளின் பின்னால் ஒளிந்து இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஜாதி ஒழி, சமூகநீதி, பகுத்தறிவு சிந்தனையை முன்னிறுத்தி இறுதி மூச்சு வரையில் தீவிரமாக களமாடிய தந்தை பெரியாரை அவர்களால் ஏற்க முடியவில்லை. மேலும் தமிழ்நாட்டின் மீது பலமுனை தாக்குதல்களை தொலைத்திருக்கும் சனாதன பாசிச சக்திகளையும் அவர்களுக்கு துணைபோகும் பிற்போக்கு சக்திகளையும் அடையாளம் கண்டு அம்பலப்படுத்துவோம் என்று கூறியுள்ளார்.