தமிழகத்தில் இடநிலை ஆசிரியர்கள் பணியிடங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் கடந்த 2009 ஜூன் 1ஆம் தேதி நிரப்பப்பட்டது,. 2009 வருடத்திற்கு முன்பாக பணிக்கு சேர்ந்தவர்களுக்கு 8,370 அடிப்படை ஊதியம் வழங்கப்பட்ட நிலையில் ஜூன் 1ம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்டவர்களுடைய கடைநிலை  ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியமானது 5200 வழங்கப்பட்டது. கல்வித் தகுதி மற்றும் பணி சுமை என அனைத்தும் ஒரே விதமாக இருந்தும் ஊதியத்தில் வேறுபாடு வழங்கப்படுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

இது குறித்து பல போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ஆசிரியர்களுடைய கோரிக்கை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் நிதித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைத்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு வர வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்துள்ளார்.