தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. இவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு டப் கொடுக்கும் வகையில் படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வால்டர் வீரய்யா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி வயநாடு நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளுக்காக தற்போது நிதி உதவி வழங்கியுள்ளார்.
அதன்படி நடிகர் சிரஞ்சீவியும் அவருடைய மகனும் நடிகருமான ராம்சரனும் இணைந்து ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்கியுள்ளனர். இது தொடர்பாக நடிகர் சிரஞ்சீவி வெளியிட்டுள்ள பதிவில், கேரளாவில் கடந்த சில நாட்களாக நடந்த இயற்கை சீற்றங்களின் காரணமாக நூற்றுக்கணக்கான விலை மதிப்பில்லா உயிர்களை இழந்துள்ளது வேதனையை தருகிறது. மேலும் இந்த இழப்புகள் என்னை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என்று கூறியுள்ளார்.