மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள் வயர்களை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என கேபிள் ஆபரேட்டர்களுக்கு தமிழ்நாடு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மின்கம்பங்களில் கேபிள் டிவி வயர்கள் விளம்பர பலகைகள் போன்றவற்றை கட்டி வைப்பதால் மின்விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

அதனால் கேபிள் டிவி ஒயர்களை 15 நாட்கள் முன்னறிவிப்பு வழங்கி அகற்றிடுமாறு ஆபரேட்டர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இது தொடர்பாக அதிகாரிகள் அவ்வபோது கள ஆய்வு மேற்கொண்டு மின் கம்பங்களை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். மேலும் அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் ஏதேனும் மின்விபத்துக்கள் ஏற்பட்டால்  அலுவலர்களே பொறுப்பேற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.