பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தீபிகா படுகோனே ஹீரோயின் ஆக நடித்துள்ள நிலையில், ஜான் ஆபிரகாம் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். ஸ்பை ஆக்சன் திரில்லர் படமான பதான் ஜனவரி 25-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் முன்பதிவு கடந்த 20-ஆம் தேதி தொடங்கியுள்ள நிலையில், வணிக ரீதியாக பெரும் வெற்றியை பெற்றுள்ளது.
சொல்லப்போனால் கேஜிஎப் 2 படத்தின் வாழ்நாள் வசூலை முன்பதிவின் மூலம் பதான் படம் முந்தியுள்ளது. ஜெர்மனியில் மட்டும் 8,500 பதான் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது. இதன் மூலம் 1.5 லட்சம் யூரோக்கள் வசூல் ஆகியுள்ளது. மேலும் தென்னிந்திய படங்களில் ஜெர்மனியில் 1.55 லட்சம் வசூல் சாதனை புரிந்து முன்னிலையில் இருக்கும் ஒரே தென்னிந்திய படம் பொன்னியின் செல்வன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Booked my Tickets for #Pathaan 7.30 am Show.. Tickets getting sold out like hot cakes.. Kolkata Srkians – See you there on 25th Jan !! #ShahRukhKhan pic.twitter.com/7cxBNimlAo
— Sumit Kadel (@SumitkadeI) January 18, 2023