குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்கள் 7301-ல் இருந்து 10,748 ஆக உயர்த்தப்படுவதாக TNPSC அறிவித்துள்ளது. ஜூன் 18ம் தேதி நிலவரப்படி காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 10,117 ஆக அதிகரித்ததை தொடர்ந்து, மீண்டும் திருத்தப்பட்ட காலி பணியிடங்களின் எண்ணிக்கை 10,748 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் குரூப் 4 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது.

இந்த தேர்வு மூலமாக 7,301 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வை சுமார் 18.5 லட்சம் பேர் எழுதியது குறிப்பிடத்தக்கது.