தமிழ்நாட்டில் புயல் மற்றும் கனமழை காரணமாக காய்கறிகளின் விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் வரும் நிலையில் பருவமழை தவறியதன் காரணம் மற்றும் மழைப்பொழிவு போன்ற பல்வேறு விஷயங்களால் வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை வரத்து குறைவின் காரணமாக கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
அதன்படி சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 90 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அதன் பிறகு பீன்ஸ் ஒரு கிலோ 110 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 160 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மேலும் பச்சை மிளகாய் ஒரு கிலோ 75 ரூபாய்க்கும் தக்காளி ஒரு கிலோ 70 ரூபாய்க்கும் பூண்டு ஒரு கிலோ 450 ரூபாய்க்கும் ஒரு கிலோ உருளைக்கிழங்கு என்பது ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது இல்லத்தரசிகள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.