ஆப்பிரிக்க நாட்டில் உள்ள கென்யா பகுதியில் உள்ளூர் கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் போது நடுவர் சர்ச்சைக்குரிய தீர்ப்பை சொன்னதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆத்திரத்தில் உள்ளூர் வாசிகள் பயங்கரமாக மோதிக்கொண்டனர். அவர்கள் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கியதோடு தீ வைத்து எரித்தனர்.

இந்த மோதலில் சுமார் 100 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் நடுவரின் சர்ச்சை தீர்ப்பால் மோதல் வெடித்த நிலையில் பின்னர் மோதலை கட்டுப்படுத்துவதற்காக கண்ணீர் புகை குண்டு வீசி பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.