வேலூர் மாவட்டத்தில் உள்ள கருகம்பத்தூர் பகுதியில் இன்று லாரி மீது மூன்று பேர் உயிரிழந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த ஜீப் தடுப்பு சுவரின் மீது மோதியது. அதன் பிறகு நிற்காமல் அந்த வழியாக சென்ற லாரி மீதும் மோதியது. இந்த விபத்தில் ஜீப்பில் பயணம் செய்த மூன்று பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். உயிரிழந்த மூன்று பேரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.