தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் நடித்துள்ள விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. நடிகர் அஜித் தற்போது துபாயில் நடைபெறும் ஒரு கார் ரேஸில் கலந்து கொள்ள இருக்கிறார். புதிதாக கார் ரேஸ் கம்பெனி ஒன்றை தொடங்கிய அஜித் ரேசில் பல வருடங்களுக்குப் பிறகு கலந்து கொள்கிறார். தற்போது அதற்கான பயிற்சி ஈடுபட்டுள்ள அஜித் பல வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் விளையாட்டில் சாதிக்க விரும்புவதாகவும் இனி கார் ரேஸ் நடக்கும் காலகட்டங்களில் கார் ரேஸில் மட்டும்தான் முழுமையாக கவனம் செலுத்த இருப்பதாக கூறியுள்ளார்.

அதன் பிறகு ஒரு ரேசராகவும் அணியின் உரிமையாளராகவும் சாதிக்க விரும்பியதாக கூறிய அஜீத் இனி கார் ரேஸ் நடக்கும் காலகட்டங்களில் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் அக்டோபர் மற்றும் மார்ச் மாத காலத்தில் ரேஸ் நடைபெறாததால் அப்போது மட்டும் ஒரு படத்தில் நடிப்பேன் என்றும் அதே சமயத்தில் 9 மாதங்களுக்கு சினிமாவில் நடிக்க போவது கிடையாது எனவும் கூறியுள்ளார். மேலும் அவருடைய பேட்டி தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அஜித் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.