
சின்னத்திரையில் நடித்து வந்த கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு லிஃப்ட், டாடா போன்ற படங்களில் நடித்த கவின் தற்போது கிஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். நடன இயக்குனரான சதீஷ் இயக்கிய காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த கிஸ் படத்தில் நடிகை ப்ரீத்தி அஸ்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கவின் நடித்த மாஸ்க் என்கிற படம் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் கிஸ் திரைப்படமும் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.