பெரியார் சிலை குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் கனல் கண்ணன் மீது 3 மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது..

திருவரங்கத்தில் உள்ள பெரியார் சிலை குறித்து ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் சர்ச்சைக்குரிய வகையில் உரையாற்றினார். இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்படி களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசினார் என்ற பிரிவில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கு பதிவு செய்து 5 மாதங்கள் ஆகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே இது குறித்து மனு தாக்கல் செய்யப்பட்டது.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் த.பெ.திக குமரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில், பெரியார் சிலை குறித்து சர்ச்சை பேச்சு வழக்கில் கனல் கண்ணன் மீது 3 மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.