புதுச்சேரியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த மற்றொரு பிரம்மாண்ட போலி மருந்து தொழிற்சாலையை அதிகாரிகள் அதிரடியாகக் கண்டுபிடித்துள்ளனர். இலங்கைக்குக் கடல் வழியாகக் கடத்துவதற்காகப் பேக் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான போலி மருந்துகள் மற்றும் மாத்திரைகள் அண்மையில் எல்லையில் வைத்துப் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்தப் பறிமுதல் விவகாரத்தை வைத்துப் பிடிபட்ட நபர்களிடம் அதிகாரிகள் நடத்திய அதிரடி விசாரணையின் முடிவில்தான், புதுச்சேரியில் ரகசியமாக இயங்கி வந்த இந்த போலி மருந்து உற்பத்தி ஆலை குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. உடனடியாக அங்கு விரைந்த அதிகாரிகள் ஆலைக்குச் சீல் வைத்து, போலி மருந்து மாஃபியா கும்பலை வேரோடு தூக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.