திருவண்ணாமலையில் பெஞ்சல் புயலின் போது பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது ஒரே குடும்பத்தை சேர்ந்த‌ 4 பேர் மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த 3 சிறுமிகள் என மொத்தம் 7 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.  பெஞ்சல் புயலின் போது திருவண்ணாமலையில் பலத்த மழை பெய்ததால் மலையடிவாரத்தின் கீழ் உள்ள வீடுகளின் மேல் மண் சரிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டு அந்த வீடுகள் மண்ணில் புதைந்தது.

இதில் அந்த வீட்டில் இருந்த 7 பேரும் மண்ணுக்குள் புதைந்து பலியான நிலையில் தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று  ஜெய்ப்பூர் செல்வதற்காக விமான நிலையம் வந்த ரஜினிகாந்திடம் இது பற்றி நிருபர்கள் கேள்வி அனுப்பினர். அதற்கு ரஜினிகாந்த் அது எப்ப நடந்துச்சு.. ஓ மை காட் எனக்கு தெரியாது என்று கூறினார். அதன் பிறகு அந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார். அதாவது படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால் ரஜினிகாந்துக்கு அது தெரியவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தை உலுக்கிய ஒரு சம்பவத்தை பற்றி நடிகர் ரஜினிகாந்த் அறியாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.