கேரள மாநிலம் வயநாடு பகுதியில் அடுத்தடுத்து 3 பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு பெரும் சேதத்தை ஏற்படுத்திய நிலையில் தொடர்ந்து இன்று 6-வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை மண்ணில் புதைந்ததில் 357 பேர் உயிரிழந்துள்ளனர்.‌

அதன்பிறகு 200 பேரை காணவில்லை என கேரளா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தொடர்ந்து பல எண்ணிக்கை என்பது அதிகரித்து வரும் நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.