தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தாயார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள twitter பதிவில்,முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் காலமானார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். தன்னை ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் பன்னீர் செல்வத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.