டார்க் க்ரடோஸ் ஆர் (Torque Kratos R) பைக்கின் விலை ரூ. 1.65 லட்சம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 105 கிலோ மீட்டர். இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 180 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும். 3kWh பேட்டரி உள்ளது. மேலும் இது 1 மணி நேரத்தில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்யக்கூடிய விரைவான சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் வருகின்றது.
அதுமட்டுமில்லாமல் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங், கணினிமயமாக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், எல்இடி விளக்குகள், ஸ்போர்ட்டி ஸ்டைல் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.