சீனாவை சேர்ந்த Liu Chuanyi என்ற 22 வயது இளைஞர் தாய்லாந்து – மியான்மர் எல்லை அருகே சுற்றித்திரிந்தபோது புதர்களால் சூழப்பட்டிருந்த கிணறு ஒன்றில் தவறுதலாக விழுந்துவிட்டார். கிணற்றில் விழுந்த அவர் உதவி கேட்டு சத்தம் போட்டு உள்ளார். ஆனால் அப்பகுதியினர் கிணறு இருந்த திசையில் இருந்து வரும் சத்தத்தை பேய்களின் சத்தம் என்று தவறாக நினைத்து கிணற்றின் அருகே செல்லாமல் இருந்து விட்டனர்.
இவ்வாறு மூன்று நாட்களாக Liu Chuanyi கிணற்றிலே தவித்துள்ளார். பின்னர் அதிகாரிகள் அவரை கிணற்றிலிருந்து மீட்டுள்ளனர். கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட போது Liu Chuanyi உடல் முழுவதும் காயங்களுடன் இருந்ததாகவும் இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.