நாட்டின் முதல் பார்முலா E பந்தயத்திற்கான டிக்கெட்டுகள் இப்போது வாங்குவதற்கு கிடைக்கிறது. ABB FIA பார்முலா E உலக சாம்பியன்ஷிப் பந்தயம் வருகிற பிப்,.11 ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான டிக்கெட் முன் பதிவு தொடங்கியுள்ளது.

இதையடுத்து முதல் டிக்கெட்டை தெலுங்கானா அரசின் சிறப்பு தலைமை செயலாளர் அரவிந்த் குமார் முன்பதிவு செய்தார். டிக்கெட் விலை ரூ.1000 முதல் ரூ.10 ஆயிரம் வரை உள்ளது. இந்த பந்தயத்தில் 22 கார்களுடன் மொத்தம் 11 அணிகள் பங்கேற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.