பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை காயத்ரி. இவருடைய நடிப்பு இந்த சீரியலில் வேற லெவலில் இருக்கும். பெண் அடிமைத்தனம் குறித்து கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில்  ஜான்சி ராணி என்ற கதாபாத்திரம் எதற்கும் துணிந்தவர் போல நடித்திருப்பார். இந்த நிலையில் சீரியல் நடித்து பட்டையை கிளப்பி வரும் ஜான்சி ராணி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.

அதில் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து ஓப்பனாக பேசி இருப்பார். இந்த சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. தன்னுடைய மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் காயத்ரி தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் நபர் ஒருவோடு ரொமான்ஸ் ஆக கண்ணாலே மியாமியா பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த காட்சியை பார்த்த இணையவாசிகள் கடும் ஷாக்காகியுள்ளனர்.