தமிழகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி அமைந்தது முதலே, முதலமைச்சர் விஜய் அவர்கள் அதிரடியான பல மக்கள் நல நடவடிக்கைகளையும், சீர்திருத்தங்களையும் மேற்கொண்டு வருகிறார். அவரது இந்த மக்கள்centric அணுகுமுறை சாமானிய மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், எக்ஸ் (X) தளத்தில் வெளியான காணொளி ஒன்று தற்போது இணையத்தையே உலுக்கி வருகிறது.
அந்த வீடியோவில் பேசும் 58 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், முதலமைச்சர் விஜய் அவர்களின் பொற்கால ஆட்சியைப் பார்த்து மிகவும் நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார். “எனக்கு இப்போது 58 வயது ஆகிறது. என் வாழ்க்கையில் முதலமைச்சர் விஜய் தம்பி மாதிரி ஒரு மக்கள் தலைவரை நான் பார்த்ததே இல்லை. ஏழை எளிய மக்களுக்காக இப்படி ஒரு நல்ல ஆட்சியை அவர் கொடுத்துக் கொண்டிருக்கிறார்” என்று மனமாறப் பாராட்டியுள்ளார்.
எனக்கு 58 வயசு..
விஜய் சார் மாதிரி யாருமே ஆட்சி பண்ணல..
உண்மைய சொல்றேன்… விஜய்யை பெத்தவங்கள கும்பிடணும் 🥹@CMOTamilnadu #தமிழகவெற்றிக்கழகம் pic.twitter.com/ptwbqxJJaN
— விஜய் ரசிகை #TVK (@Itsme__visali) July 7, 2026
மேலும், “இப்படிப்பட்ட ஒரு தங்கமான மகனைப் பெற்றெடுத்த முதலமைச்சர் விஜய் அவர்களின் பெற்றோரை நாம் கைகூப்பி கும்பிட வேண்டும்” என்று கண்கலங்கியபடி தழு தழுத்த குரலில் கூறியுள்ளார். தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இந்த வீடியோ தற்போது லைக்குகளை அள்ளிக் குவித்து வைரலாகி வருகிறது.
