தமிழ் சினிமாவில் வெளியான வாரணம் ஆயிரம், அசல் மற்றும் வெடி போன்ற பல படங்களில் நடித்துள்ளவர் சமீரா ரெட்டி. இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் நடித்துள்ளார். இவர் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருக்கும் நிலையில் instagram-ல் அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை சமீரா ரெட்டி தற்போது ஒரு அதிர்ச்சிகரமான தகவலை கூறியுள்ளார்.

அதாவது இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிடும்போது சிலர் பில்டர் பயன்படுத்துமாறு கூறியுள்ளனர். ஆனால் அதற்கு அவர் இதுதான் என்னுடைய கலர் மற்றும் இதுதான் என்னுடைய எடை என்பதால் நான் நானாகவே இருக்க விரும்புவதாக கூறிவிட்டார். அதன் பிறகு சினிமாவில் நடிக்க வந்த புதிதில் சிலர் அவரிடம் மார்பக அறுவை சிகிச்சை செய்யுமாறு கூறியுள்ளனர். இதைக் கேட்டு முதலில் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆனால் அதனால் எந்த பிரச்சனையும் வராது என சிலர் கூறியுள்ளனர். இருப்பினும் சமீரா ரெட்டி ஏற்கவில்லை. மேலும் மார்பக அறுவை சிகிச்சை செய்யாமல் நான் தவிர்த்தது மிகவும் நல்லது என்று கூறியுள்ளார்.