தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விக்ரம். இவர் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோன்று இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படமும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தற்போது நடிகர் விக்ரம் மற்றும் சிவகார்த்திகேயன் முன்பு பேசிய ஒரு வீடியோவை ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

அதாவது நடிகர் சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக இருந்தபோது ஒரு நிகழ்ச்சியில் விக்ரம் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் நீங்கள் தற்போது ஹீரோவாகி விட்டீர்கள். இதற்கு உங்களுடைய கடின உழைப்பும் முயற்சியும் காரணம். பொதுவாக சினிமாவில் நடிப்பதற்கு அதிர்ஷ்டம் காரணம் என்று கூறுகிறார்கள். ஆனால் கடின உழைப்பும் முயற்சியும் மட்டும்தான் காரணம். இந்த இரண்டும் உங்களிடம் இருக்கிறது. அதேபோன்று அழகும் இருக்கிறது. எனவே என்னுடைய படத்துடன் உங்கள் படம் ரிலீசாக கூடாது என்று கூறினார். அதோடு இருவரும் ‌ ஒப்பந்தமும் போட்டுக்கொண்டனர். மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.