தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த சரத்குமாரின் மகள் தான் வரலட்சுமி. இவர் முதன்முதலாக போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சண்டக்கோழி மற்றும் சர்க்கார் உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லியாக களமிறங்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இதனைத் தொடர்ந்து தாரை தப்பட்டை மற்றும் விக்ரம் வேதா உள்ளிட்ட பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் வரலட்சுமி சரத்குமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பாய்ஸ் மற்றும் காதல் உள்ளிட்ட பல படங்களில் நடிக்க கிடைத்த வாய்ப்புகளை தான் மிஸ் செய்ததாக வருத்தம் தெரிவித்தார். மேலும் அதற்கு தன்னுடைய தந்தைதான் காரணம் இன்றும் அவருக்கு தான் நடிப்பதில் விருப்பம் இல்லாததால் அனுமதிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.