உலகப் புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, FIFA உலகக்கோப்பைத் தொடருக்குப் பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக வெளியான தகவலுக்குத் தற்பொழுது அதிரடியாக மறுப்பு தெரிவித்துள்ளார். முன்னதாக, உலகக்கோப்பைத் தொடரோடு ரொனால்டோ தனது ஓய்வை அறிவிப்பார் என்று அவருடைய சகோதரி தெரிவித்த கருத்து, உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரொனால்டோ இந்த ஓப்பன் ஸ்டேட்மென்ட்டை வெளியிட்டுள்ளார். ​இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ரொனால்டோ, கோபத்தில் தான் எந்தவொரு அவசர முடிவையும் எடுக்க மாட்டேன் என்றும், தனது ஓய்வு குறித்துக் குடும்பத்தினருடன் விரிவாகக் கலந்தாலோசித்த பின்னரே இறுதி முடிவை எடுப்பேன் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், எதிர்காலத்தைப் பற்றி அதிகமாகச் சிந்திக்காமல் நிகழ்காலத்தில் மட்டுமே வாழ விரும்புவதாகவும், போர்ச்சுகல் அணிக்குத் தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்து வெற்றிகளைப் பெற்றுக் கொடுப்பதே தனது தற்போதைய ஒரே குறிக்கோள் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.