பீகார் மாநிலத்தில் உள்ள சங்கரம்பூர் கிராமத்தில் மம்தா தேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் பிட்டு குமார் என்பவரை காதலித்து வந்தார். இந்த நிலையில் மம்தா தேவியின் விருப்பத்தை மீறி அவரது பெற்றோர் கிதார் பகுதியைச் சேர்ந்த ஜுரேந்திர குமாருக்கு அவரை திருமணம் செய்து வைத்தனர். இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் குழந்தை உள்ளது. மம்தா தேவி தனது காதலனை மறக்காமல் இருந்துள்ளார்.

அவர் இரண்டு வயது குழந்தையுடன் தனது காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக தப்பி சென்றார். இதுகுறித்து ஜிதேந்திர குமார் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.